தமிழ்நாட்டில் விமான நிலையங்களில் கையாண்ட சரக்குகளின் அளவு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

தமிழ்நாட்டில் விமான நிலையங்களில் கையாண்ட சரக்குகளின் அளவு அதிகரிப்பு

சென்னை, ஆக. 5- கடந்த ஆறு மாதங்களில் 1.84 லட்சம் டன் சரக்குகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கையாளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டு களாக பன்னாட்டு பய ணியர் விமான சேவைகள் முற்றிலும் முடங்கி உள் ளன. இருப்பினும், சரக்கு விமான சேவைகள் தடையின்றி செயல்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதி யாகும் பொருட்களுடன், மருத்துவப் பொருட்க ளும் பெருமளவு இறக்கு மதி செய்யப்படுகின்றன.

இதனால், 2020ஆம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் கையாளப் பட்ட சரக்குகளின் அளவு அதிகரித்துள்ளது.இதில், சென்னை விமான நிலை யத்தில் மட்டும் 1.78 லட் சம் டன் சரக்குகள் நடப்பு ஆண்டில் கையாளப்பட் டுள்ளன. இது, கடந்த ஆண்டில் 1.13 லட்சம் டன் னாக இருந்தது. மொத்தத் தில் 2020ஆம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 64 ஆயிரத்து 760 டன் சரக்கு கள், தமிழ்நாடு முழுதும் உள்ள விமான நிலையங் களில் அதிகம் கையாளப் பட்டுள்ளன என, விமான நிலைய அதி காரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment