பதவி விலக அமெரிக்க அதிபர் அறிவுறுத்தல்..!!
நியூயார்க், ஆக. 5- நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ, அரசு ஊழியர்கள் உட் பட பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பது விசார ணையில் தெரிய வந் துள்ள நிலையில் அவரை பதவி விலக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள் ளார். அமெரிக்காவின் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதி யில் தங்களை துன்புறுத் தியதாக பல பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக ஆளுநர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற் றும் முன்னாள் ஊழியர் கள் உட்பட 179 பேரிடம் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை நடத்தி னர்.
இந்த பாலியல் புகார் கள் குறித்து வழக்குரை ஞர்கள் மூலமாக சுதந்திர மான விசாரணை நடத்த நியூயார்க் மாகாண அரசு தலைமை வழக்குரைஞர் லெட்டிடியா ஜேம்ஸ் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் வழக்குரைஞர் குழுவை லெட்டிடியா ஜேம்ஸ் நியமித்தார். இந்த குழு தனது விசாரணை அறிக் கையை வெளியிட்டது. அதில் நியூயார்க் ஆளுநர் பல பெண்களுக்கு பாலி யல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உறுதி செய்யப் பட்டது. விசாரணை குழு கடந்த 5 மாதங்களாக மேற்கொண்ட விசார ணையில் ஆளுநர் அலு வலக முன்னாள் மற்றும் தற்போதையை பெண் ஊழியர்களை விரும்பத் தகாத வகையில் தொடு தல், தகாத கருத்துக்களை தெரிவித்தல் உள்ளிட்ட வகையில் ஆண்ட்ரூ துன் புறுத்தல் அளித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது.
இதன் மூலம் ஆண்ட்ரூ, கூட்டாட்சி சட்ட விதி களையும், ஆளுநர் அலு வலக நடைமுறைகளை யும் மீறியிருப்பது விசா ரணையில் தெரியவந்துள் ளது. இந்த விசாரணை யின் போது 74 ஆயிரத் திற்கும் அதிகமான ஆவ ணங்கள், மின்னஞ்சல் கள், வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் மாகாண அரசு தலைமை வழக்குரைஞர் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே தான் எந்த பெண்ணிடமும் இது வரை தவறாக நடந்து கொள்ளவில்லை என ஆண்ட்ரூ குவாமோ தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ நீண்ட நாள் களுக்கு முன்பே பதவி விலகி இருக்க வேண்டும் என நியூயார்க் நகர மக் கள் கருத்து தெரிவித்து உள்ளனர். நியூயார்க் மாகாண ஆளுநர் சட் டத்தை மதிக்காமல் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப் பதாக விசாரணை குழு அறிக்கை சமர்பித்திருக் கும் இந்த தினம் நியூயார்க் நகருக்கு மிக மோசமான நாள் ஆகும் என அரசு தலைமை வழக்குரைஞர் லெட்டிடியா ஜேம்ஸ் வேதனை தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment