- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·   மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங் களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்க முடிவு என தலையங்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

·       தனியார்மயமாக்கும் காப்பீட்டு திருத்த மசோதாவை கடும் அமளிக்கிடையே மக்களவையில் மோடி அரசு நிறைவேற்றியது.

·  பெகாசஸ் ஒட்டுக் கேட்பு பிரச்சினை குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வித மாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து உள்ளார்.

·       அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக் கையை அடுத்த ஆண்டுக்கு நிதி அமைச்சகம் தள்ளி வைத்துள்ளதாக தகவல்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·       பெகாசஸ் விவகாரத்தில் உரிய விசாரணை மேற் கொள்ளப்பட்டு உண்மை நிலை மக்களுக்குத் தெரிய வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

·       முற்போக்கான சட்டங்களை கொண்டு வந்தத்தில் தமிழ் நாடு சட்டமன்றம் முன்னணியில் உள்ளது என குடியரசுத் தலைவர் புகழாரம்.

தி டெலிகிராப்:

·    தனது தொலைப்பேசி பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என மூத்த பத்திரிகை யாளர் பரஞ்சோய் குஹா தகூர்தா, உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஒட்டுக் கேட்பு முறை ரகசிய தகவல் அளிப்பவர்கள் மற்றும் விசில் ப்ளோவர்கள் தகவல் அளிப்பதைத் தடுத்துவிடும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment