ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், லோக் தாந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், லோக் தாந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் சந்திப்பு

புதுடில்லி, ஆக. 4- ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், லோக் தாந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவை டில்லியில் செவ்வாய்க் கிழமை சந்தித்துப் பேசி னார். இருவரும் நாட்டில் இப்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒருங்கி ணைக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலை யில் இந்தச் சந்திப்பு முக் கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அவரின் மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரை லாலு பிர சாத் சந்தித்து ஆலோ சனை நடத்தினார் என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment