சீன ஆய்வகத்தில் இருந்து தான் கரோனா பரவியது அமெரிக்கா ஆய்வறிக்கை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கரோனா பரவியது அமெரிக்கா ஆய்வறிக்கை வெளியீடு

வாசிங்டன், ஆக. 4- உலகம் முழுவதும் கரோனா  வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச் சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நில வரப்படி, உலகம் முழுவதும் கரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கரோனா  குறித்த ஆய்வ றிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அதில் , கரோனா  வைரஸ் சீனா வின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள் ளது. இந்த ஆய்வுக் கூடத்தில் மனி தரை தாக்கும் வகையில் கரோனா  வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப் பதற்கான பணிகளும் நடந்துள் ளன. இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கரோனா  வைரஸ், 2019, செப்டம்பர் 12க்கு முன்பாகவே, உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன. உகான் ஆய்வகத்தில் அபாயகர மான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப் பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர் வாகம் சீன அரசிடம் விண்ணப்பித் துள்ளது. ஆய்வகம் செயல்படத் துவங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment