அமீரகம், ஆக. 4- 900 சிறு வர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையையடுத்து, அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய சிறு வர், சிறுமியருக்கு சினோ பார்ம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அமீரகத்தில் தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் சினோபார்ம், அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் வி போன்ற பல்வேறு தடுப்பூசிகளை போட் டுக் கொள்கின் றனர்.தற்போது 12 வய துக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கும் கரோனா தடுப்பூசியானது போடப் பட்டு வருகிறது.இதற் கிடையே உலக அளவில் சிறு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அமீரகத் தில் 3 வயது நிறைவடைந்த குழந்தைகள் அனைவருக் கும் கரோனா தடுப் பூசியை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதில், அந்த தடுப்பூசி போடுவதால் குழந்தைக ளுக்கு பாதிப்பு ஏற் படாமல் இருப்பதற்காக, அபுதாபியில் கடந்த ஜூன் மாதம் சினோ பார்ம் தடுப்பூசி 3 வயது முதல் 17 வயதுடையவர் களுக்கு எந்த அளவில் நோய் எதிர்ப்புத்தன் மையை கூட்டுகிறது? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணிகளானது தொடங்கியது. உலக அளவில் கரோனா தடுப்பூசியை தயாரிக்கும் சீனா, அமெரிக்கா, இங் கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக இது போன்ற மருத்துவ சோத னைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் அமீரகத்தில் இந்த ஆய்வு கள் நடைபெற்றது முதல் முறையாகும். பன்னாட்டு மருத்துவ விதிமுறைகளை கடைப்பிடித்து அபுதாபி சுகாதாரத்துறையின் ஒத்துழைப்பில் 3 வயது முதல் 17 வயதுடைய அமீரகத்தில் வசிக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த 900 சிறுவர், சிறுமிகளிடம் இந்த ஆய்வுகள் நடைபெற்றது.
தன்னார்வலர்களாக வருபவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாது காப்பில் வரும் குழந்தை களுக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு சுகாதார அமைச்சகத் தால் கடந்த ஜூன் மாதம் முதல் கண்காணிக்கப் பட்டு வந்தது.ஓவ்வொரு வரின் தனிப்பட்ட நோய் எதிர்ப்புத்தன்மை ஆய் வுக்கு எடுத்துக் கொள் ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஆய்வின் முடிவில், அவசர பயன் பாடு மற்றும் உள்நாட்டு மதிப்பீடுகளின் அடிப் படையில் அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமிகள் சினோ பார்ம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந் துரைக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச் சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

No comments:
Post a Comment