ஜிம்பாப்வே நாட்டில் அதிபர் தேர்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

ஜிம்பாப்வே நாட்டில் அதிபர் தேர்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிப்பு

ஹராரே, ஆக. 4- ஜிம் பாப்வே நாட்டில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலை யில் அரசியல் வன்முறை களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளும் தேசபக்தி முன்னணி கட் சியின் ஆதரவாளர்கள் இருவர், முக்கிய எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் தாக்குதல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.  இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடந்துவரும் அரசியல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகை யில், காவல் துறையின ருக்கு உதவ ராணுவம், விமானப்படை உள்ளிட் டவைகளுக்கு அதிகாரம் அளித்ததாக அதிபர் எட்கர் லுங்கு கூறினார்.

இதுதொடர்பான தனது அறிக்கையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது காவல் துறையின்தினசரி வேலை, ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு மற்ற பாதுகாப்பு பிரிவு களின் உதவி தேவை என்று அதில் அதிபர் எட்கர் லுங்கு தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment