முக அடையாளத்தை வைத்து டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

முக அடையாளத்தை வைத்து டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதி

அபுதாபி, ஆக. 4- அபுதாபி இஸ்லாமிய வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரக உள்துறை அமைச்சகத்தின் முக அடையாளத்தை சரிபார்க்கும் வசதியை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி, அபுதாபி இஸ்லாமிய வங்கி பொது மக்கள் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்க வங் கிகளுக்கு நேரடியாக வர வேண்டிய கட்டாய மில்லை. தங்களது வீட் டில் இருந்தபடியே அல்லது அலுவலகத்தில் இருந்த படியே வங்கிக் கணக்கை தொடங்கி கொள்ளலாம். இத்தகைய வசதியை அமீரகத்தில் அறிமுகம் செய்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை அபு தாபி இஸ்லாமிய வங்கி பெற்றுள்ளது.

இந்த வசதியின் மூலம் புதிதாக வங்கிக் கணக்கை தொடங்குபவர்களின் கடவுச்சீட்டு அமீரக அடை யாள அட்டை உள்ளிட் டவை சரிபார்க்கப்படுவது டன், அவரது முக அடை யாளமும் உறுதி செய்யப் படும். இந்த நடைமுறை யின் மூலம் 5 நிமிடத்தில் புதிய வங்கிக் கணக்கை தொடங்க முடியும். இந்த வங்கிக் கணக்கை தொடங் குவதற்கு பொதுமக்கள் இந்த வங்கியின் செயலியை தங்களது அலைபேசி அல்லது திறன்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment