நாடாளுமன்ற ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு மலேசியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

நாடாளுமன்ற ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு மலேசியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

கோலாலம்பூர், ஆக. 4- மலேசியாவில் கரோனா  தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது.

இதனிடையே கரோனா  வைரஸ் பரவல் தடுப்பு நட வடிக்கைகள், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் உள் ளிட்டவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உட னடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதனைத் தொடர்ந்து மன்னரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு தொடங்கியது. அப் போது நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டங் களை கடந்த 21ஆம் தேதியே திரும்பப் பெற்றுவிட்டதாக சட்ட அமைச்சர் தக்கியுதின் ஹாசன் தெரிவித்தார். அவ சரநிலை சட்டங்களை திரும்பப் பெற மலேசிய மன்னரின் ஒப்புதல் தேவை. ஆனால், அதைப் பெற அரசாங்கம் தவறிவிட்டதாகவும், தமது ஒப்புதல் இன்றி அரசு செயல் பட்டுள்ளதாகவும் மன்னர் அதிருப்தி தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் கரோனா  வைரஸ் பரவலை காரணம் காட்டி அவைத் தலைவர் நாடாளுமன்றத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இது நம்பிக்கை வாக் கெடுப்பை தடுப்பதற்கான பிரதமர் முகைதின் யாசினின் தந்திரம் என கூறி நாடாளுமன்ற ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment