கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானையில் காணப்படும் 13 எழுத்துக்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானையில் காணப்படும் 13 எழுத்துக்கள்!

13 எழுத்து ராசியில்லை என்ற கருத்தை அன்றே ஏற்கமறுத்தவர்கள், ஆரியக் கலாச்சாரம் எந்த அளவிற்கு நம்மூள் ஊடுருவி உள்ளது என்றால் நாம் பயன்படுத்தும் எண்களில் கூட ராசி என்ற ஒரு மூடநம்பிக்கையைச் சேர்த்துவைத்துள்ளார்கள்.

 வாகனங்கள் வாங்கும் கிட்டத்தட்ட அனைவருமே 13- எண் வராதவாறு பார்த்துக்கொள்வார்கள். வாங்குபவர் ராசி பார்க்கமாட்டார் என்றாலும் உறவினர்களும் உற்றாரும் 13 ராசி இல்லாத எண் - நீங்கள் வேண்டுமென்றால் நம்பிக்கை இல்லாமல் இருங்கள் ஆனால் வீட்டிற்காக என்று கூறி அந்த எண்கொண்ட பதிவெண்ணைப் புறக்கணிப்பார்கள்.

 1313 கொண்ட எண்ணை பணம் கொடுத்து வாங்கச் சொன்னாலும் வாங்கமாட்டார்கள். 2012 ஆம் ஆண்டு ஒரு இருசக்கர வாகன நிறுவனம் 1313 நம்பர் கொண்ட இருசக்கர வாகனத்தை வாங்கினால் தங்க காசு இலவசம் என்றது, ஆனால் ஒருவர் கூட வாங்க முன்வரவில்லை. தங்கக் காசே கிடைத்தாலும் அந்த எண் தேவையில்லை என்ற ஒரு மனநிலைக்கு பார்ப்பனர்கள் நம்மை திரித்துவைத்துவிட்டனர்.

இதற்கு ஒரு காரணம் சாஸ்திரத்தில் இருந்து கூறுவார்கள்

அதாவது 1 என்ற சூரியனும் 3 என்ற குரு பகவானும் சேர்ந்து ராகு பகவானின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த  13ஆம்  எண் பெண் ராசியான ரிஷப ராசியில் உச்சமடைவதை குறிப்பதால் பெண்களால் பிரச்சினைகளையும் சிரமங்களையும் இந்த எண்ணில்  உள்ளவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும். தான் விரும்பாவிட்டாலும் வேதனை தரும் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கும். தான் செய்வது தர்மத்திற்கு மன சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிந்திருந்தும் அடுத்தவர்களை தண்டிக்கும் சூழ்நிலை ஏற்படும். மேன்மையான தகுதியில் இருந்தாலும் சஞ்சலமான மன நிலை உடனும், வேதனையுடனும் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கும் என்று எழுதிவைத்துள்ளனர்.   இதனால் தான் தங்கக்காசு கொடுத்தாலும் இந்த எண்ணை வாங்காத முட்டாள் மக்கள் இன்றும் உள்ளனர்,  ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  தமிழ் நாகரிகக் குடிகள் இந்த எண் விளையாட்டை எல்லாம் துச்சமென மதித்துவந்தனர்.

 இதற்கு சான்றாக கீழடியில் கிடைத்த ஒரு கருப்பு சிவப்பு நிற பானை ஓட்டில் காணப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.  இதுவரை காணப்பட்ட அதிகபட்ச எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு இதுதான் இதில் உள்ள எழுத்துக்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் கல்வியறிவில் முழுமை அடைந்த ஒரு சமூகமாக வாழ்ந்துவந்தனர் என்று அறியப்படுகிறது.

No comments:

Post a Comment