புதுடில்லி, செப். 3- இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 15 லட்சத்துக் கும் மேற்பட்டோர் பணி இழந்து உள்ளனர்.
இந்தியாவில் சில ஆண்டுகளாக தொடர்ந்து பணி இழப்பு அதிக ரித்து வருகிறது. கரோனா பெருந் தொற்றால் அது மேலும் மோசமானது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் போதிலும் வேலை வாய்ப்பு எண்ணிக்கை முன்னேறவில்லை. இந்தியாவில் அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் வேலையிழப்பு இரு மடங்காகி உள்ளது.
இது குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூலை மாதம் பணியில் உள்ளோர் எண்ணிக்கை 3993.8 லட்சமாக இருந்தது. அது ஆகஸ்ட் மாதம் 3977.8 லட்சமாகக் குறைந்து உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் பணி இழந்துள்ளனர். அதாவது பணி இழந்தோர் ஜூலை மாதம் 6.95% ஆக இருந்தது. அது ஆகஸ்ட் மாதம் 8.32% ஆக உயர்ந்துள்ளது.
இதில் நகர்ப்புறங்களில் ஆகஸ்ட் மாதம் வேலை இன்மை சுமார் 1.5% அதி கரித்துள்ளது. இது ஜூன் மாதம் 10.07%, ஜூலை மாதம் 8.3% ஆகக் குறைந்து மீண்டும் ஆகஸ்ட் மாதம் 9.78% ஆகி உள்ளது. இரண் டாம் அலை கரோனா பரவலுக்கு முன்பு அதா வது நகர்ப்புற வேலை இன்மை 7.27% ஆக இருந் தது. அது ஏப்ரல் மாதம் 9.78% ஆக உயர்ந்து மே மாதம் 14.73% ஆனது.
No comments:
Post a Comment