முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார்
சென்னை, செப். 3- வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு,
இங்கே பேசியிருக்கக்கூடிய பல்வேறு கட்சியினுடைய தலை வர்கள், அயோத்திதாசர் அவர்க ளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்; நன்றியும் தெரிவித்திருக்கிறீர்கள்; பாராட் டும் தெரிவித்திருக்கிறீர்கள்.
அதேநேரத்தில், நம்முடைய உறுப்பினர் ஈஸ்வரன், வ.உ.சி. அவர்களுடைய 150ஆவது பிறந்த நாள் வருகின்றது. எனவே, அதனை அரசு விழாவாக, அவரைப் பெரு மைப்படுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல் சுதந்திர தின உரை
நான் முதலமைச்சராகப் பொறுப் பேற்று, என்னுடைய முதல் சுதந்திர தின உரையிலேயே நான் குறிப்பிட் டிருக்கிறேன். வ.உ.சி. அவர்களு டைய 150ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என்று நான் அறிவித்திருக்கி றேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150ஆவது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.
· சென்னை காந்தி மண்ட பத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக் கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.
· தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ. சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும். · தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவைச் சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்.
· செய்தித் துறையின் பரா மரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் அவர்க ளுடைய மணிமண்டபமும் புன ரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும்.
· வ.உ.சிதம்பரனார் அவர் கள் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகை யில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.
· திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.
· வ.உ.சிதம்பரனார் எழு தியுள்ள அனைத்துப் புத்தகங்கள் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப் பட்டு, தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம் குறைந்த விலை யில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
· திருநெல்வேலியில் வ.உ. சிதம்பரனார் மற்றும் பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப் பீட்டில் அமைக்கப்படும்.
· கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப் படும். விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் மற்றும் பாராட் டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
· கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மறைந்த நவம்பர் 18 ஆம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும்.
· இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல் வேலியிலும் உருவாகும் அரசுக் கட்டடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர் கள் பெயர் சூட்டப்படும்.
· பள்ளி, கல்லூரி மாண வர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறை யின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனார் அவர்களுடைய வாழ்க் கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.
· தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறும்.
· தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக கப்பலோட் டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின் மயப்படுத்தி வெளியிடப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டார்.

No comments:
Post a Comment