திருச்சி - சிவப்புத் தோழர் மேகா.பிச்சைக்கு நமது வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

திருச்சி - சிவப்புத் தோழர் மேகா.பிச்சைக்கு நமது வீரவணக்கம்!

திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த பெருமக் களில் ஒருவரும், தோழர் எம்.கல்யாண சுந்தரம் அவர் கள் பெயரில் ஒரு படிப்பகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே உறையூரில் நிறுவி, திராவிடர் இயக்கம் உட்பட அனைத்துக் கட்சியினரோடும், தலைவர்க ளோடும் மிகவும் அன்புடன் பழகியவரும், சிறந்த பண்பாளரும், கொள்கையாளருமான தோழர் மேகா.பிச்சை அவர்கள் (வயது 86) இன்று (3.9.2021) காலை இயற்கையெய்தினார் என்ற செய்திக் கேட்டு மிகவும் துயரமும், துக்கமும் அடைகிறோம்.

தோழர் தா.பாண்டியன் அவர்களிடமும், நம்மிட மும் கொள்கையாளர்களிடமும் மிகுந்த பாசத்தோடு பழகிய பெருமகன் அவர்.

தோழர் எம்.கல்யாணசுந்தரம் நூற்றாண்டு, நிலை நிற்கும் வகையில் திருச்சி - நமது பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் ஆரம்பப் பள்ளிக்கான கட்டடம் ஒன்றை நமக்குக் கட்டித் தந்து, எம்.கே. அவர்களது பெயர் வைத்து தோழர் தா.பாண்டியன் திறந்து வைக்க பெருமுயற்சி எடுத்து வெற்றிகண்ட கொள்கை வீரர்!

திருச்சிக்கு நான் வரும்போதெல்லாம் பெரும் பாலும் பெரியார் மாளிகைக்குத் தோழர்களுடன் வந்து சந்திக்கத் தவற மாட்டார்; இடையிடையே நலம் விசாரித்துக் கொள்வார்.

கடைசியாக சென்றபோதுகூட அவரது நலம் பற்றி தோழர் .சுப்ரமணியம் (PSM) இடம் விசாரித்துத் தெரிந் தேன். கரோனா காலமானதால் சந்திப்பைத் தவிர்த்தோம்.

அவரது இழப்பு அக்கட்சிக்கு மட்டுமல்ல. திருச்சி மாநகரத்துக்கே பேரிழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவது மகன், மகள்கள் குடும்பத்தார், கட்சித் தோழர்கள் அனைவருக்கும் ஆறு தலையும், ஆழ்ந்த இரங்கலையும் உரித்தாக்கு கிறோம்.

அவருக்கு நமது வீரவணக்கம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

3.9.2021

சென்னை


No comments:

Post a Comment