ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து செப்.25இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து செப்.25இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

 சென்னை, செப். 4- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மேனாள் ஒன்றிய அமைச் சருமான அஸ்வினிகுமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களை சந்தித்தார் அப் போது அவர் தெரிவித்த தாவது,

இந்தியாவின் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பி லான தேசிய சொத்துக் கள், பிரதமர் மோடி அர சின் தேசிய பணமாக்கல் வழி கொள்கை வாயி லாக, தனியாருக்கு விற்கப் படுவதை காங்கிரஸ் கண் டிக்கிறது.

உள்கட்டமைப்புக் கான 100 லட்சம் ரூபாய் கோடி முதலீட்டுக்காக, பொதுத் துறை நிறுவனங் களை விற்று அதிலிருந்து கிடைக்கும், 6 லட்சம் கோடி ரூபாயை எப்படி செலவிட முடியும்; இது நியாயமற்ற வாதம்.பெட் ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை போன்ற விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே, தேசிய பணமாக்கல் வழி கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள் ளது.

இவற்றை கண்டித்து செப்.25ஆம் தேதி, நாடு தழுவிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த உள்ளோம்.வரும் 2024 மக்களவைத் தேர்தலில், மிகப்பெரிய மாற்றம் உண் டாகும். நாட்டு மக்கள் அனைவரும் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்ற னர். இவ்வாறு அஸ்வினி குமார் கூறினார்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம், மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் தலை மையில் நேற்று முன்தினம் (2.9.2021) நடந்தது. அதில், தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி பேசியதாவது: பெண் களின் ஓட்டு வங்கி 50 சதவீதம் உள்ளது. பெண் களின் அதிகாரத்தை பர வலாக்குவதன் வாயிலாக, காங்கிரஸ் வெற்றி பெற முடியும். சமையல் எரி வாயு உருளை விலை ஏற் றத்தை கண்டித்து, மகளிர் காங்கிரசார் போராட் டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற் றியதற்கும், முதலமைச்ச ரின் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடு படுத்த வேண்டாம் என உத்தரவிட்டதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்க ளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

No comments:

Post a Comment