சட்டமன்றத்தில் இன்று... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

சட்டமன்றத்தில் இன்று...

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு

பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு

வரி (சந்தைக் கட்டணம்) இரத்து!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப். 4- தமிழ்நாடு முதல மைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.9.2021) தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விதி 110இன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, 

முக்கிய அறிவிப்பு

நெசவாளர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும், நலத் திட்டங்களையும் வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.  அதன் தொடர்ச்சியாக, இப்போது நெசவுத் தொழிலை நம்பியிருக்கக் கூடிய நெசவாளர் தோழர்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறு வனங்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு முக்கிய அறிவிப் பினை 110 விதியின்கீழ் வெளியிடு வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய துணித் தொழில் வணி கத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ் நாடு துணித் தொழில் வகிக்கிறது.  தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலை களின் எண்ணிக்கை 1,570 ஆகும், இவ்வாலைகள்மூலம் நூற்கப்படும் நூல், நாட்டின் மொத்த நூற்புத் திறனில் 45 விழுக்காடு ஆகும்,  தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத்  தேவையான பஞ்சின் அளவில்  95 விழுக்காடு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

சந்தைக் கட்டணம்

தமிழ்நாடு வேளாண் பொருட் கள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் 1987, பிரிவு 24இன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1 விழுக்காடு விதிக்கப்படுகிறது.  மேற்படி சட் டத்தின்படி, பருத்தி பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) விதிக்கப்படுகிறது.  சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும்.  மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு  போன்ற உற்பத்தி பொருட்கள்  மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.  

இதனால் வெளி மாநிலங்களி லிருந்து பஞ்சு கொள்முதல் செய் யப்படும் பொழுது சிறு, குறு நூற் பாலைகள் போக்குவரத்துக் கட் டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடு நாள் கோரிக்கையாக இருக்கிறது.  இத னால், மாநிலத்தில் இந்தியப் பருத் திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்பொழுது, நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பராமரிக்க  வேண்டியதில்லை.

வரி இரத்து

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில், இந்த வரியினை நீக்க வேண்டு மென்று தங்களது கோரிக்கையாக அவர்கள் தெரிவித்தனர்.  இதனைக் கருத்திற்கொண்டு, தொழில் முனை வோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று,  பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி (சந்தைக் கட் டணம்) இரத்து செய்யப்படுகிறது.  (மேசையைத் தட்டும் ஒலி) இதற் கான உரிய சட்டதிருத்தம் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே கொண்டு வரப்படவிருக்கிறது என்ப தைக் கூறி, அமைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment