சென்னை, செப். 4- கிராமப்புற சுகாதார சேவையை மேம் படுத்த புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகா தார ஆய்வாளர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்று சட்டப் பேரவை யில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேரவையில் 2.9.2021 அன்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:
கிராமப்புற சுகாதார சேவையைமேம்படுத்த வும், நோய்த் தடுப்பு நட வடிக்கைகளை வலுப் படுத்தவும் புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய் வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கரோனா தொற்றை கண்டறியும் வகையில், தேவைப்படும் ஆய்வகங்க ளுக்கு புதிதாக 17 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் ரூ.5.10 கோடி யில் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரிய வகை ரத்த சிவப் பணுக்கள் உறைநிலை சேமிப்பு பிரிவு ரூ.3.75 கோடியில் ஏற்படுத்தப்படும்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிரத்யேக ரத்தம், எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மய்யம் ரூ.2.56 கோடியில் அமைக்கப் படும். சென்னை டி.எம்.எஸ். வளாக ஆய்வகத்தில் ரூ.4 கோடியில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறு வப்படும்.
அனைத்து மாவட்டங் களிலும் மக்கள் நலவாழ்வு மய்யங்களில் பொது மக்கள், குழந்தைகள், கர்ப்பிணிக ளுக்கு ரூ.1.19 கோடி செலவில் யோகா பயிற்சி அளிக் கப்படும்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறு பயன்பாட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத் துவதுடன், அதிலிருந்து பயோடீசல் தயாரிக்கப் படும்.
முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப் பீட்டு திட்டம் 2022 ஜன வரி முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் படும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விபத்து, காயப் பதிவேடு ரூ.1.56 கோடியில் ஏற்படுத் தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மொடக்குறிச்சி பாஜக உறுப்பினர் டாக் டர் சரஸ்வதி பேசும் போது, ‘‘மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை சுகாதா ரத் துறை. அந்த சேவையை அமைச்சர் மா.சு. போல யாரும் செய்ய முடியாது’’ என்று பாராட்டினார்.
No comments:
Post a Comment