சென்னை,செப்.28- தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதரமாவட் டங்களில் காலியாக உள்ள உள் ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது களத் தில் 80,819 வேட்பாளர்கள் உள்ள னர்.
தமிழ்நாட்டில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல் வேலி, தென்காசி ஆகிய 9 மாவட் டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்ட மாக நடக்கிறது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் அக்.9-இல் நடக் கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதிவரை நடந்தது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய் திருந்தனர். 23-ஆம் தேதி நடந்த பரி சீலனையின்போது 1,246 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 25-ஆம் தேதி வரை மனுக்களை திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 15,287 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, இறுதி வேட்பா ளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களி லும் 3,346 பதவிகளுக்கான வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் 26.9.2021 அன்று அறிவித்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சித் தலைவர்கள், 149 ஊராட்சிவார்டு உறுப்பினர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 ஊராட்சித் தலைவர்கள், 186 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட் டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில்
6 ஊராட்சி தலைவர்கள், 376 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 382 பேரும், தென் காசி மாவட்டத்தில் 6 ஊராட்சித் தலைவர்கள், 400 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 406 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 22 கிராமஊராட்சி தலைவர்கள், 357 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 379 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 கிராம ஊராட்சி தலைவர்கள், 453 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத் தம் 487 பேரும்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர், திருப்பத்தூர் மாவட்டத் தில் 179பேர், வேலூர் மாவட்டத்தில் 316 பேர்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, மற்ற மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளி லும் பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 3 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் 7 பேரும் சேலம்மாவட்டத்தில் 11 பேரும் ஈரோடு மாவட்டத்தில் 7 பேரும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் 10 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 33 ஊராட்சி உறுப்பினர்கள், அரியலூர் மாவட் டத்தில் 4 ஊராட்சி உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 3 ஊராட்சி உறுப்பினர்கள்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 17 ஊராட்சி உறுப்பினர்கள், திருவாரூர் மாவட் டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கரூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சித் தலைவர்கள், 8 ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள், தருமபுரி மாவட்டத்தில் 6, கிருஷ் ணகிரி மாவட்டத்தில் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர்கள், 30 ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள், விருதுநகர் மாவட்டத்தில் 29 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 4 கிராம ஊராட்சித் தலைவர், 25 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற வழக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. களத்தில் 80,819 வேட்பாளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment