ஒன்றிய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

ஒன்றிய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்

மாநிலம் முழுவதும் ஏராளமானவர்கள் கைது

சென்னை, செப். 28- ஒன்றிய அரசின் வேளாண் சட் டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு முழுவ தும் நேற்று (27.9.2021) சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் சிபிஎம் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஅய் மாநில செயலா ளர் இரா.முத்தரசன், விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் உள்ளிட்ட அர சியல் கட்சித் தலைவர்கள் உட்பட மாநிலம் முழுவ தும்ஆயிரக்கணக்கா னோர் கைது செய்யப்பட் டனர்.

புதுச்சேரியில் கடை கள் அடைக்கப் பட்டிருந் தன. தனியார் பேருந்து கள், ஆட்டோக்கள் முழு மையாக இயங்க வில்லை.

வேளாண் சட்டங் களை திரும்பப் பெற வலி யுறுத்தி நேற்று (27.9.2021) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத் துக்கு அய்க்கிய விவசாயி கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் திராவி டர் கழகம், திமுக, காங் கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி, நேற்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணாசாலை யில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கி ரஸ் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி, இந்திய கம்யூ னிஸ்ட் (எம்.எல்) மாநிலச் செயலாளர் என்.கே.நட ராஜன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடரா ஜன் உள்ளிட்ட ஆயிரத் துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பின்னர் அனைவரையும் காவல் துறையினர் கைது செய் தனர்.

சென்னை கிண்டி அஞ் சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்தில் மார்க்சிஸ்ட் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் ரயில் மறியல் நடந்தது.

இதேபோல் மதுரை, கோவை, திருச்சி, நாமக் கல், திருப்பூர், திருநெல் வேலி, விழுப்புரம் உள் ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், ஒன்றியங்கள் என்று 500-க்கும் அதிக மான இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட் டங்களும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந் தன. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 23 ஆயிரம் பேர் கைது செய் யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தனியார் பேருந்து கள், டெம்போ, ஆட்டோக் கள் முற்றிலுமாக இயங்க வில்லை. வணிக நிறுவனங் கள், கடைகள், மார்க் கெட்கள், தொழிற்சாலை கள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப் பட்டன. 15க்கும் மேற் பட்ட இடங்களில் மறியல் நடந் தது. இதில் ஆயிரக்கணக் கானோர் கைதாகி விடு விக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment