திலீபன் நினைவு நாள்: மரியாதை செலுத்த முயன்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

திலீபன் நினைவு நாள்: மரியாதை செலுத்த முயன்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கொழும்பு, செப். 28- விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனின் நினைவு நாளையொட்டி, இலங் கையில் அவருக்கு மரி யாதை செலுத்த முயன்ற அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன், கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி இலங்கை அர சுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட் டிருந்தபோது உயிரிழந் தார்.

அவரின் 34-ஆம் ஆண்டு மறைவு நாளையொட்டி, இலங்கையின் யாழ்ப் பாணம் நகரில் 23.9.2021 அன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெறவிருந் தது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடா ளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்று திலீபனுக்கு மரி யாதை செலுத்த முயன்றனர்.

இதுகுறித்து தகவலின் அடிப்படையில் நிகழ் விடம் சென்ற காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப் போது செல்வராசா கஜேந்திரனுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல்துறையினர் இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அவருடன் மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய் தனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவ ருக்கு ஆதரவு தெரிவித்து நினைவேந்தல் கூட்டத் தில் பங்கேற்றதற்காகவும், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற் காகவும் செல்வராசா கஜேந்திரனை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந் நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண மேனாள் முத லமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் கூறுகையில், ‘‘ஒரு நாடாளுமன்ற உறுப்பி னரை சாதாரண குற்ற வாளியைப் போல் காவல் துறையினர் இழுத்துச் சென்றது சர்வாதிகார மாகும். இறந்தவரை நினைவுகூரக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசின் உண்மை முகத்தை வெளிப் படுத்துவது மட்டுமின்றி தங்கள் அரசியல் உரிமை களை பெறுவதற்கான போராட்டத்தில் இலங் கைத் தமிழர்களின் உறு தியை மேலும் அதிகரிக் கும்’’ என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன் உள்பட மூவர் பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டனர்.

No comments:

Post a Comment