ஒட்டாவா. செப், 28- கரோனா அச்சுறுத்தலால் இந்தியர் கள் கனடா நாட்டுக்கு வர விதிக்கப்பட்ட தடையை அந் நாட்டு அரசு நீக்கியுள்ளது.
கரோனா பரவல் கார ணமாகக் கனடா அரசு இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. அதை யொட்டி இந்தியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் பயணிகள் விமானங்க ளுக்கு விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 26 வரை அமலில் இருந்தது. அந்த தடை முடிவடைந் துள்ள நிலையில் கனடா அரசு இந்தியப் பயணி களுக்கான தடையை நீக்கி உள்ளது.
இதையொட்டி நேற்று செப்டம்பர் 27 முதல் ஏர் கனடா விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து தனது விமானச் சேவைகளைத் தொடங்கி யுள்ளது. இதைப் போல் ஏர் இந்தியா நிறுவனமும் வரும் 30 ஆம் தேதி முதல் கனடாவுக்கு மீண்டும் விமானச் சேவைகளைத் தொடங்க உள்ளது. இதையொட்டி கனடா அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கரோனா நிலைமையின் அடிப்படையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இந்தியா-கனடா இடையே விமானச் சேவை தொடங்குகிறது. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமானம் கிளம்பும் 18 மணி நேரத் துக்குள் பெறப்பட்ட கரோனா நெகடிவ் சான் றிதழ் கட்டாயம் ஆகும்.
இவை டில்லி விமான நிலையத்தால் அங்கீகரிக் கப்பட்ட ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவசியம் பய ணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மேலும் அவற்றை வலைத் தளத்தில் பதி வேற்றம் செய்திருப்பதும் கட்டாயம் ஆகும்” எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
No comments:
Post a Comment