3 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

3 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

புதுடில்லி, செப்.29 காவிரி நதி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த 3 ஆண்டுகளில் அதற்கென தனிப்பட்ட தலைவர் (முழுநேர தலைவர்) நியமிக்கப்படவில்லை. ஒன்றிய நீர்வள ஆணைய தலைவரே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. முதலமைச்சர் மு..ஸ்டாலின், பிரதமரை சந்தித்தபோது இந்த கோரிக்கையை வலியுறுத்தியதாக தெரிவித்தார். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஒன்றிய நீர்வள ஆணைய தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தார் என்ற எஸ்.கே.ஹல்தார் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment