40 வயதினரை தாக்கும் புதிய அல்சைமர் நோய் சுவீடன் பல்கலை. ஆய்வில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

40 வயதினரை தாக்கும் புதிய அல்சைமர் நோய் சுவீடன் பல்கலை. ஆய்வில் கண்டுபிடிப்பு

துபாய், செப். 4- ‘அல்சைமர்எனும் ஞாபக மறதி நோய் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்களை பாதிக் கும் என்பது மருத்துவ உலகின் பரவலான கருத்து. இந்நோயால் பாதித்தவர் கள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து, நாளடைவில் தான் யார் என்பதை மறக் கும் கொடுமையும் ஏற் படும். பெரும்பாலும் மர பியல் ரீதியாகத்தான் இந் நோய் வருவதாக கூறப் படுகிறது.

பன்னாட்டு அளவில் 60 வயதை கடந்த 100 பேரில் 5 பேரும், 75 வயதை கடந்தவர்களில் 4இல் ஒருவரும் இந்த நோயால் பாதிக்கப்படு கின்றனர். இந்தியாவில் மட்டும் 39 லட்சத்திற்கும் அதிகமானோரும், உலக ளவில் 4 கோடி பேருக்கும் அதிகமானோரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சுவீட னில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் பராமரிப்பு அறிவியல் துறையை சேர்ந்த ஆய் வாளர்கள், 40 வயதிலேயே தாக்கக் கூடிய புதிய வகை அல்சைமர் நோயின் வடி வத்தை கண்டு பிடித்து உள்ளனர். இதை, ‘உப் சாலா ஏபிபி டெலிசன்’ (Uppsala APP deletion)  என அடையாளப்படுத்தி உள்ளனர். மேலும், வய தானாலும் முடிந்த வரை வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், மூளையை உற்சாகமாகவும், சுறு சுறுப்பாகவும் வைத்து கொண்டால் அல்சைமர் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment