அய்டா சூறாவளியால் கடும் வெள்ளம் அமெரிக்காவில் 42 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

அய்டா சூறாவளியால் கடும் வெள்ளம் அமெரிக்காவில் 42 பேர் பலி

நியூயார்க், செப். 4- அமெரிக் காவின் பல மாகாணங் களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நக ரில் கடுமையான தாக் கத்தை ஏற்படுத்தி வருகி றது. வட கிழக்கு அமெரிக் காவில் கன மழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலி யாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று நாட் களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியா னாவில் அய்டா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகி றது. லூயிசியானா, மிஸ் ஸிசிப்பியில் சூறாவளி அய்டா ஏற்படுத்திய தாக் கத்தின் தீவிரத்தை செயற் கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்து கின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத் திய அய்ந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக அய்டா கருதப்படுகிறது.

சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங் கள் மோசமாக பாதிக் கப்பட்டுள்ளன.

நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கன மழை கொட்டும் காட்சி யும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்து போகும் காணொலியை உள்ளூர் மக்கள் பகிர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், நியூ யார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதி யிலும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார் கள். அவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் நிர் வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறி விக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளா சியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத் தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment