விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சி

 முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றச்சாட்டு

வாசிங்டன், செப். 4- ஆப் கானிஸ்தான் விமானப் படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதா கவும், இந்தியாவுக்கு எதி ராக பாகிஸ்தானை பயன் படுத்துவதாகவும் அய்.நா. வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றம் சாட்டி உள்ளார். அய்.நா. சபைக் கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர். அமெ ரிக்காவில் கேபினட் அமைச்சர் தகுதியைப் பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப் பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி.

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதை யொட்டி இவர் அமெரிக் காவின் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குச் சிறப்புப்பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஜோ பைடன் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி, அவர்களது ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

முதலில் ஜோ பைடன் செய்ய வேண்டியது, நமது  கூட்டாளிகளுடன், அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தா லும், ஜப்பானாக இருந்தா லும் சரி, அவர்களுடைய முதுகெலும்பாக இருப் போம் என்று மறு உறுதி செய்ய வேண்டும். நமக்கு அவர்களும் தேவை. இரண்டாவது, உலக மெங்கும் நாம் பயங்கர வாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த (ஆப்கானிஸ்தா னில்) தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப் பெரிய அளவில் தங்க ளுக்கு ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் பார்க்க முடி யும்.

நாம் பாதுகாக்கப் பட்டுள்ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். நமது இணையதள பாது காப்பு, பத்திரமாக இருப் பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து நம் தளங் களில் ஊடுருவுவார்கள். ஏனென்றால் நாம் மீண் டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறி கள் எதுவும் இல்லை.

நாம் சீனாவைப் பார்க்க வேண்டும். ஆப் கானிஸ்தானை தலிபான் கள் கைப்பற்றியுள்ள இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆப்கானிஸ் தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்கிறது. (இந்த விமா னப்படை தளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.)

சீனா, ஆப்கானிஸ் தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ் தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக் கிறது. நமக்கு நிறைய சிக் கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம், நமது கூட்டாளி களை வலுப்படுத்துவதா கும்.

அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணு வத்தை நவீனப்படுத்த வேண்டும். சைபர் குற்றங் கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை எதிர்கொள் வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment