அமீரகம்-எகிப்து நாடுகளின் ஜாயித்-3 கூட்டு ராணுவப் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

அமீரகம்-எகிப்து நாடுகளின் ஜாயித்-3 கூட்டு ராணுவப் பயிற்சி

அமீரகம், செப். 4- அமீரகம்-எகிப்து நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவ தற்காக ஜாயித்-3 என்ற தலைப்பில் கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே 2 நாடுகளுக்கு இடையே கடந்த 2014ஆம் ஆண்டில் ஜாயித்-1 என்ற தலைப்பில் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டில் ஜாயித்-2 என்ற தலைப்பில் தரை மற்றும் விமானப்படைகளுக்கு இடையே கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது. தற்போது நடப்பு ஆண் டில் ஜாயித்-3 என்ற தலைப்பில் தரைப்படை மற்றும் கடற்படைகளுக்கு கூட்டு ராணுவப் பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது.

இந்த பயிற்சிகள் மூலம் கூட்டு ராணுவ நடவடிக் கைகளை மேம்படுத்தவும், இருதரப்பு நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப் பட்டுள்ளது. மேலும் நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துதல், போரில் புதிய உத்திகளை செயல் படுத்துவது போன்றவை பரிமாறிக்கொள்ளப்படும்.

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் திறனை ராணுவத்தினருக்கு அதிகப்படுத்தும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி ஆகிய 3 பகுதிகளிலும் இந்த பயிற்சி நடத்தப்படும். ஜாயித்-3 என்ற கூட்டு ராணுவப் பயிற்சியானது மொத்தம் 10 நாட்கள் அபுதாபி கடல், வான் மற்றும் தரைவழிகளில் நடைபெறும். இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பயிற்சி கள் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment