புதுடில்லி,செப்4-மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழ்நாட் டுக்கு கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று ஒன் றிய சுகாதாரத் துறை அமைச் சரிடம் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத் தினார்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (3.9.2021) டில்லி சென்று, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார். அப் போது, தமிமிழ்நாட்டுக்கான மருத்துவ தேவைகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந் துத் துறை இயக்குநர் செல்வவி நாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய் தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதா வது:
தமிழ்நாட்டுக்கான மருத்துவ தேவைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சரிடம் கொடுத்திருக்கிறோம். கரோனா தொற்று பேரிடரில் இருந்து மக்களை காக்க தடுப் பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. அதனால், தமிழ்நாட்டின் மக் கள் தொகைக்கு ஏற்ப கூடுத லான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டு மானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
கோவைக்கு தனியாக எய்ம்ஸ் மருத்துவமனை வேண் டும். 11 புதியஅரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய மருத் துவக் கல்லூரி அமைக்க வேண் டும். தமிழ்நாட்டுக்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங் கள் வேண்டும். செங்கல்பட்டு, குன்னூர்தடுப்பூசி மய்யத்தை செயல்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கேரளா - தமிழ்நாடு எல்லை யான 9 மாவட்ட மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டுமென தெரிவித்தோம். அதை ஏற்றுக் கொண்டஅவர், அந்த 9 மாவட்டங்களுக்கான கூடுதல் தடுப்பூசிகளை வழங் குவதாக தெரிவித்தார்.
அரியலூர் உள்ளிட்ட மாவட் டங்களில் சில ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
பாஜக ஆட்சி செய்கிற கரு நாடகத்தில் விநாயகர் சதுர்த் திக்கு என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு தமிழ்நாடு அர சிடம் பாஜக கோரிக்கை விடுத்தால் நன்றாக இருக்கும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குள் நீட் தேர்வுக்கு விலக் குக் கேட்டு தீர்மானம் நிறை வேற்றி ஒன்றிய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.

No comments:
Post a Comment