வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, செப். 4- வன விலங்குகள் தாக்கி உயிரி ழப்போர் குடும்பத்துக் கான நிவாரணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங் கப்படும் என்று வனத் துறை அமைச்சர் காராமச் சந்திரன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று  (3.9.2021) வனத் துறைமானியக் கோரிக்கைமீதான விவா தத்தில் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசிய தாவது:

வன விலங்குகளுக் கான அவசரசிகிச்சை மற் றும் மறுவாழ்வு தேவை களுக்காக கோவை, திரு நெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் உயர் வன விலங்கு சிகிச்சை, மறுவாழ்வு மய்யம் ஏற் படுத்தப்படும்.

வனத் துறையின் தேவைகள் மற்றும் சிறந்த மேலாண்மைக்காக தமிழ் நாடு வனத் துறை நட வடிக்கைகள் முற்றிலும் மின்னணுமயமாக்கப் படும். இதன்மூலம், வனஉயிரின வழித்தடங்கள், சூழல்மண்டலங்கள், ஈர நிலங்கள், வனஉயிரின வாழ்விடங்களில் தாக் கத்தை ஏற்படுத்தும் மண் டலங்களை வரையறுக்க முடியும்.

விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங் களுக்கான நிவாரணத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

தென் மாவட்ட யானை வாழிடங்களைப் பாதுகாக்கும் வகையில் அகத்தியர் மலையில் `யானைகள் காப்பகம்' உருவாக்கப்படும். அழிந்து வரும் நிலையில் உள்ள, அரிய கடற்பசு இனத்தையும், அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் வகையில் மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடற்பசுபாதுகாப்பகம் அமைக்கப்படும்.

வனக் குற்றங்களை எளிதில் கண்டறிய, ஒவ் வொரு வன மண்டலத் திலும் மோப்பநாய் பிரிவு தொடங்கப்படும். கடல்வாழ் விலங்குகள் வேட்டை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க, சிறப்பு கடல்சார் உயர் இலக்குப் படை உருவாக்கப்படும்.

வனப் பகுதியில் காணப்படும் வெளி நாட்டு களைத் தாவரங் களை அகற்றுவது, வனப் பகுதிகளை வளமான பகு தியாக மேம்படுத்துவது தொடர்பாக தனிக் கொள்கைவகுக்கப்படும். மாநில அளவில்வனம், வன உயிரினக் குற்றங் கள்கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும். தமிழ் நாடு தேயிலைத் தோட் டக் கழகத்தில் பணிபுரியும் 212 ஊழியர்களுக்கு, நிலு வையில் உள்ள திருத்திய ஊதியம் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment