இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி- ஆய்வில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி- ஆய்வில் கண்டுபிடிப்பு

மாஸ்கோ, செப். 29- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப் பட்ட தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா. இது, உருமாறிய கரோனா வைரஸ் களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக்கூடியது.

இதுதான் இந்தியாவில்கோவி ஷீல்டுஎன்ற பெயரில் பயன் பாட்டில் உள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட்.

இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசி களை 2 தவணைகளாக அடுத்த டுத்து போட்டால் எப்படி இருக் கும் என்பதை அறிய அஜர்பைஜான் நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட் டது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி யத்தின் ஆதரவுடன் இந்த ஆய்வு நடந்தது.

இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்ட னர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆய்வு தொடங்கியது. முதலில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட் டன.

இதில், முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக் கப்பட்டன. ஆய்வின் 57-ஆவது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.

இதுபோல், அய்க்கிய அரபு அமீரகம், ரஷ்யா ஆகிய நாடுக ளிலும் மேற்கண்ட 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து வரு கிறது.

No comments:

Post a Comment