90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள்: ஆப்கனில் இளம்பெண்கள் தொடர் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள்: ஆப்கனில் இளம்பெண்கள் தொடர் போராட்டம்

காபூல், செப். 6- 90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள் எனப் பதாகைகளைத் தாங்கி, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக இளம் பெண்கள் பல்வேறு இடங் களில் போராட்டங்களை முன் னெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பன்னாட்டு ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ் தானில் தலிபான்கள் ஆட்சி அமை யவுள்ள நிலையில், சம உரிமை வேண்டும் என்று நாடு முழுவதும் இளம்பெண்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து காபூல், ஹெராத் நகரங்களில்பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள் என்ற பதாகைகளை ஏந்தியபடிஇளம்பெண்கள் பேரணி சென் றனர். இந்த நிலையில் காபூலில் போராட்டம் நடத்தியபெண்கள்மீது தலிபான்கள் தாக்குதல் நடத் தியுள்ளனர்என்று செய்தி வெளி யாகியுள்ளது.

போராட்டம் குறித்து காபூலில் செயல்படும் ஆம்னெஸ்டி தன் னார்வலர் சமீரா அமிதி கூறும் போது, “தலிபான்கள் அவர்களின் கோர முகத்தைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், வங் கிகள், அலுவலகங்கள், ஊடகங் களில் பணிபுரியும் பெண்களை வீட்டிலேயே இருக்குமாறு தலி பான்கள் கேட்டுக்கொண்டுள்ள னர்.

ஆப்கனில் அரசியல், பொருளா தார, சமூகப் பிரிவுகளில் செய லாற்றி வந்த பெண்கள் மறையத் தொடங்கியுள்ளனர். பெண் சமூக ஆர்வலர்களுக்குத் தலிபான்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment