புதுடில்லி, செப். 6- ‘சிப்’ என அழைக்கப்படும் ‘செமி கண்டக்டர்கள்’ தட்டுப் பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பு 20 முதல் 25 சதவீதம் வரை பாதிக்கப் படும் என, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறு வனம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமா கவே உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், செமி கண் டக்டர் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும், நுகர்வோர் எலக்ட்ரா னிக்ஸ் துறையினருக்கும் செமி கண்டக்டர்கள் தேவைப்படுவதால் தட் டுப்பாடும், போட்டியும் மேலும் அதிகரித்துள் ளது.இத்தகைய சூழலை அடுத்து, மகிந்திரா நிறு வனம் அதன் வாகன தயாரிப்பு ஆலைகளில் இம்மாதத்தில் ஏழு நாட் களை உற்பத்தி இல்லாத நாட்களாக அறிவித்து உள்ளதாக பங்குச் சந்தை களுக்கு தெரிவித்துள்ளது.
மேலும், உற்பத்தி அளவு குறைவதால் அது நிறுவனத்தின் வருவாயை யும், லாபத்தையும் பாதிக் கும் என்றும் தெரிவித் துள்ளது.இருப்பினும், டிராக்டர் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி, லாரி மற்றும் பேருந்து தயா ரிப்புகள் இதனால் எந்த பாதிப்பையும் அடைய வில்லை என்றும் மகிந் திரா தெரிவித்துள்ளது.
இதற்கு முன், ‘மாருதி சுசூகி’ நிறுவனமும் செமி கண்டக்டர்கள் தட்டுப் பாடு காரணமாக, இம் மாதத்தில் அதன் அரி யானா மற்றும் குஜராத் தில் உள்ள ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment