புதுடில்லி, செப். 6- நடப்பு ஆண்டில் இந்தியாவில், ‘யுனிகார்ன்’ நிறுவனங் களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என, பகுப்பாய்வு நிறுவன மான, ‘ஹுருன் இந் தியா’வின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஒரு பில்லியன் டாலர் அதாவது, 7,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங் கள், ‘யுனிகார்ன்’ நிறுவ னங்கள் என அழைக்கப் படும்.இந்தியாவில் நடப்பு ஆண்டில், ‘மாதத் துக்கு மூன்று’ என்ற அள வில், யுனிகார்ன் நிறுவ னங்கள் உருவாகி வருகின் றன.
ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இந்தியா வில் மொத்தம் 51 யுனி கார்ன் நிறுவனங்கள் உள் ளன. நடப்பு ஆண்டில் மட்டுமே 26 நிறுவனங்கள் உருவாகி உள்ளன. சராசரியாக மாதத்துக்கு மூன்று நிறுவனங்கள் என உருவாகி உள்ளன. உலகளவில் அதிக யுனி கார்ன் கொண்ட நாடுகள் வரிசையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடி யாக மூன்றாவதாக இந் தியா உள்ளது. இவ்வாறு ஹுருன் அறிக்கை தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment