கடந்த ஆட்சியில் நீட், டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

கடந்த ஆட்சியில் நீட், டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம்

868 வழக்குகளை திரும்பப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு

சென்னை, செப். 28 கடந்த ஆட்சியில் நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதி யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்-அமைச்சர் மு..ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 13.-9.-2021 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் உரையாற்று கையில், நீட் தேர்வு மற் றும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வர்கள் மீது முந்தைய அர சால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.  அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகை யில், நீட் தேர்வுக்கு எதி ராக அறவழியில் போரா டியவர்கள் மீது பதியப் பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைக ளுக்கு எதிராகப் போரா டியவர்கள் மீது பதியப் பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக் குகளைத் திரும்பப் பெற வும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கை களையும் கைவிடவும், தமிழ்நாடு முதல்-அமைச் சர் மு..ஸ்டாலின் ஆணை யிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment