அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது

அரியலூர், செப்.6- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், அரிய லூர் மாவட்டம் மணப் பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான தங்க சிவமூர்த்தி அவர்க ளுக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

ஆசிரியர் நாளை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விரு துகள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச் சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் பங்கேற்று விரு துகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ரமணா, ஜெயங்கொண் டம் சட்டப்பேரவை உறுப் பினர் .சொ..கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செந்துறை கல்வி மாவட்டத்திலிருந்து இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர்  தங்க சிவமூர்த்தி அவர்கள் ஆவார்.

No comments:

Post a Comment