மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டும் வீடியோக்கள்; மலையாளம், தெலுங்கில் வைரலாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டும் வீடியோக்கள்; மலையாளம், தெலுங்கில் வைரலாகிறது

சென்னை, செப்.6 தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ஆம் தேதி மு..ஸ்டாலின் பொறுப்பு ஏற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் மு..ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது

குறிப்பாக கரோனா ஒழிப்புப் பணிகளில் அவர் காட்டிய தீவிரம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவிப்புகள் தமிழ்நாட்டை தாண்டியும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.100 நாட்களில் என்னவெல்லாம் ஒரு முதல்-அமைச்சரால் செய்யமுடியும் என்பதற்கு மு..ஸ்டாலின்தான் உதாரணம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக காணொலி பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொலியில், மு..ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் தமிழ்நாட்டுக்கு செய்த சாதனைகளை அடுக்கடுக்காக ஒருவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் பேசிய காணொலி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில், அவர் கூறியதாவது:- நான் 3 விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். 2 கோடி குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். 2 கோடி குடும்பங்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுத்தார். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார். பெண்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், கரோனா காலத்தில் நமக்காக பணியாற்றிய மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை, செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை, மற்ற சுகாதார பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கினார். பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து சலுகைகள் அறிவித்தார். கரோனாவால் பத்திரிகையாளர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பல துறைகளில் வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு ரூ.4,508 கோடி ஒதுக்கியிருக்கிறார். 100 நாட்களில் ஒரு முதல்-அமைச்சர் செய்த காரியங்கள் இவை. அந்த முதல்-அமைச்சரின் பெயர் பினராயி விஜயன் அல்ல. மு..ஸ்டாலின். இவ்வாறு அந்த காணொலியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலினின் சாதனைகளை கூறும் காட்சிப்பதிவு தெலுங்கிலும் வேகமாக பரவி வருகிறது. பிற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகைகளும் முதலமைச்சர் மு..ஸ்டாலினின் 100 நாட்களின் வியத்தகு சாதனைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment