போட்டித் தேர்வுக்கு தனி அலைவரிசை அமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

போட்டித் தேர்வுக்கு தனி அலைவரிசை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் முன்னணி தனியார் நிறுவனங் களுடன் இணைந்து தொழில்நுட்ப மய்யங்களாக தரம் உயர்த்தப்படும்.

போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை தொடங்கப்படும். தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளரும் தொழில்பிரிவுகளில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

2014 - 2016 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புபுதுப்பித்தல் சலுகையாக 2017 - 2019 ஆண்டுகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment