பெரியார் உலகம் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

பெரியார் உலகம் நன்கொடை

யூனியன் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைக்கப்பட்ட உண்டியல் மூலம் வசூலான நன்கொடை தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டது. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம், தமிழ்நாடு - 25.9.2021 அன்று நடத்திய 26ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பெரியார் உலகம் அமைவதற்கு நன்கொடை அளித்திட வேண்டுகோள் விடுத்து,பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தின் நுழைவாயிலில் உண்டியலும், பணம் செலுத்துவதற்கான உறையும் வைக்கப்பட்டது. பல தோழர்கள் ஆர்வமுடன் நன்கொடை செலுத்தினர். நன்கொடை மூலம் பெறப்பட்ட ரூ.11,380 அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், யூனியன் வங்கி நலச் சங்க நிர்வாகிகள், தலைவர் கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர் எஸ்.நடராசன், ஆலோசகர்கள் டி.ரவிக்குமார், கே.சந்திரன், பெண்கள் அணி அமைப்பாளர் ஞா.மலர்க்கொடி, சென்னை பிராந்திய செயலாளர்கள் லோகேஷ் பிரபு, வேலாயுதம் ஆகியோர் அளித்தனர். புதிய நிர்வாகிகள் ஆசிரியர்  அவர்களிடம்  வாழ்த்துப் பெற்றனர்.

No comments:

Post a Comment