மாநிலங்களவை உறுப்பினர்களாக தி.மு.க. சார்பில் டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

மாநிலங்களவை உறுப்பினர்களாக தி.மு.க. சார்பில் டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

சென்னை,செப்.28- மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக வைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று (27.9.2021) மாலை, திமுக வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான கி.சீனிவாசன் அறிவித்தார்.

இதற்கான சான்றிதழை தேர்தல் நடத் தும் அதிகாரியிடம் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் கி.சீனி வாசனிடம் நேற்று மாலை பெற்றுக் கொண் டனர். அப்போது சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்தார்.

டாக்டர் கனிமொழி 2026 ஏப்ரல் வரையும், ராஜேஷ்குமார் 2022 ஜூன் வரையும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்க முடியும்.

மாநிலங்களவையில் ஏற்கெனவே திமுக வுக்கு திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங் கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வ ராஜ், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, மு.சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகிய 8 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது மேலும் 2 பேர் தேர்வாகி உள்ளதால் மாநிலங் களவையில் திமுகவின் பலம் 10 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையில் திமுகவுக்கு 24 உறுப்பினர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment