புதுடில்லி, செப்.28- ஜி.எஸ்.டி., விலக்கு பொருட்களை மறு ஆய்வு செய்யவும், வரி ஏய்ப்புகளை கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஒன்றிய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட் டத்தில் ஜி.எஸ்.டி., அமைப் பின் சீரமைப்பிற்காக இரண்டு குழுக்களை அமைக்க முடிவு செய்யப் பட்டது.
இந்நிலையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய அந்த குழுக்களை அமைத்து, ஒன்றிய நிதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய ஜி.எஸ்.டி., விகித மறு சீரமைப்புக்காக அமைக் கப்பட்ட ஏழு அமைச்சகர்கள் அடங்கிய குழுவுக்கு, கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார்.
மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், பீகார் துணை முதல்வர் தர்கி ஷோர் பிரசாத், உ.பி., நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா, கோவா அமைச் சர் மாவின் கோடின்ஹோ ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
இதேபோல், ஜி.எஸ்.டி.,யின் சீர்த்திருத் தங்களை மேற்கொள்வ தற்காக அமைக்கப் பட் டுள்ள குழுவுக்கு, மகாராட்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோ டியா, தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சத்தீஸ்கர் நிதி அமைச்சர் சிங் தியோ, அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, ஆந்திர நிதி அமைச்சர் புக்கானா ராஜேந்திரநாத், அசாம் நிதி அமைச்சர் அஜந்தா நியோக் மற்றும் ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரியும் நியமிக்கப் பட்டுள்ளனர்
நெல் கொள்முதல் நிலையங்களில்
விவசாயிகள் விற்பனை செய்ய இணையத்தில் பதிவு செய்ய வசதி
காஞ்சிபுரம்,செப்.28- விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்ய இணையத்தில் பதிவு செய்யலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்திதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து கொண்டு, நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-2022-ல் விவ
சாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் <www.tncsc.tn.gov.in> மற்றும் <www.tncsc-edpc.in> ஆகிய இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மோலாளர் அலுலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment