பஞ்சாப், அரியானா, டில்லியில் கடைகள், பள்ளி, கல்லூரி, அலுவலக செயல்பாடுகள் முடங்கின
புதுடில்லி,செப்.28- விவசாயிகளின் முழு அடைப்பால் பஞ்சாப், அரியானா, டில்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட் டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுவதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஏராளமான புகார் மனுக்கள் அளிக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி டில்லி, உத்தர பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆணையம் தாக்கீது அனுப்பி யுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கு மாறு 4 மாநிலங்களின் தலை மைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்களுக்கு ஆணை யம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த பின்னணியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்.27 அன்று தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது.
இதன்படி நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று (27.9.2021) முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டில்லி யின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் 10 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
பஞ்சாப், அரியானாவில் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. பள்ளி, கல்லூரிகள் செயல் படவில்லை. அரசு அலுவலகங் களின் செயல்பாடுகளும் முடங் கின. இரு மாநிலங்களிலும் சாலை மறியல், ரயில் மறியல், சுங்கச்சாவடிகளை கைப்பற்று தல் உள்ளிட்ட போராட்டங் களை விவசாயிகள் நடத்தினர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
உத்தரப் பிரதேசம், ராஜஸ் தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஆங்காங்கே விவ சாய சங்கங்கள் போராட்டம் நடத்தின. ஆந்திரா, கேரளா, கருநாடகா ஆகிய தென் மாநிலங்களின் முக்கிய நகரங் களில் போராட்டங்கள் நடை பெற்றன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.
பாரதிய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறும்போது, "எங்களது முழுஅடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற் றுள்ளது. 25 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட் டத்தில் பங்கேற்றனர். அமைதி வழியில் போராட்டத்தை நடத்தினோம். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட வில்லை. டில்லியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்காக வருந்துகிறேன். மத்திய அர சுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment