தயாரிப்புத் துறை உற்பத்தி குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

தயாரிப்புத் துறை உற்பத்தி குறைவு

புதுடில்லி, செப்.3 அய்.எச்.எஸ்., மார்கிட் இந்தியா எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி ஓரளவு உயர்ந்து, 52.3 புள்ளிகளாக உள்ளது.

கரோனா பரவல் மற்றும் உள்ளீட்டு செலவு அதிகரிப்பு ஆகிய காரணங் களால், வணிக ஆர்டர்கள் மற்றும் உற் பத்தி குறைந்த அளவிலேயே ஆகஸ்டில் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலையில் இதுவே 55.3 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

இருப்பினும், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து இரு மாதங்களாக ஒட்டு மொத்தத்தில் அதிகரித்தே உள்ளது.

பி.எம்.அய்., குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

இந்த வகையில், தொடர்ந்து இரு மாதங்களாக வளர்ச்சி காணப் பட்டாலும், தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி பலகீனமாகி, வேகத்தை இழந்துள்ளது.

 

No comments:

Post a Comment