புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் "மியு" உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் "மியு" உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, செப்.3 பல்வேறு உரு மாற்றங்களை எடுத்து உலக நாடு களை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், அடுத்ததாக  'மியு 1.621 ' என்ற உருமாற்றத்தை எடுத்துள்ள தாக உலக சுகாதார அமைப்பு எச்சரித் துள்ளது.

மிகவும் ஆபத்தான இந்த எம்யு வகை கரோனா வைரஸ் வளர்ச்சி, பாதிப்பு, பரவல் ஆகியவை குறித்துக் கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல்வேறு வகைகளில் உருமாறி உலக நாடு களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதில் டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ்தான் அதிவேகப் பரவல் கொண்டதாகவும், அதிக மான உயிரிழப்பை ஏற்படுத்துவ தாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் கரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு, பல்வேறு நாடுகளிலும் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரு கிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி செலுத்தியவர்களும் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், தொற்றால் பாதிக்கப் பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள் ளது ஆறுதல் அளிக்கிறது.

ஆனால், முதல் முறையாக கொலம்பியாவில் கண்டறியப்பட்ட மியு வகை உருமாற்ற கரோனா வைரஸ், தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையே எதிர்க்கும்  வல்லமை கொண்டதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அந்த வைரஸ் குறித்து அடுத்தடுத்த ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், அப்

போது தான் அதன் உண்மை நிலவரம் தெரியும் எனத் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மியு வகை உருமாற்ற வைரஸ், தற்போது தென் அமெரிக்கா, அய்ரோப்பிய நாடு களிலும் கண்டறியப்பட்டு வருவ தாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் பரவுவதால் நோய் தொற் றும்  உலக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தடுப்பூசி செலுத்தாதவர்களிடையே டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

சார்ஸ்-கோவிட்-19 வகை வைரஸ் ஏராளமான உருமாற்றம் அடைந் தாலும் அதில் பெரும்பாலும் சிறிய அளவில் மட்டும் பாதிப்பை ஏற் படுத்தின.

ஆனால், சில உரு மாற்றங்கள் மட்டுமே அதிவேக மாகப் பரவுதல், நோயின் தீவிரத்தை அதிகப் படுத்துதல், தடுப்பூசியை எதிர்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப் படுத்துதல் போன்ற பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன.

உலக சுகாதார அமைப்பு கண்டறிந்த வகையில் 193 நாடுகளில் ஆல்ஃபா வகை வைரஸ்களும், 170 நாடுகளில் டெல்டா வகை வைரஸ் களும், மியு உள்ளிட்ட 5 வகை உரு மாற்ற வைரஸ்களும் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment