ஆப்கானிஸ்தான் மக்கள் நடைப்பயணமாக இடம்பெயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

ஆப்கானிஸ்தான் மக்கள் நடைப்பயணமாக இடம்பெயர்வு

காபூல், செப்.3 ஆப்கானிஸ் தானில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் ஆப்கா னிஸ்தான் அகதிகள் வெளி யேறும் சோகக்காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ் தான் போர்  முடிவுக்கு வந்து இருக்கிறது.  காபூ லில் இருந்து  அமெரிக் காவின் வெளியேற்ற நட வடிக்கை முடிவுக்கு வந் தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரி தாபம் நேர்ந்திருக் கிறது.

துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளு கையில் நமது உயிர்களுக் கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆப்கானிஸ்தானி யர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால் தான் அவர்கள் மூட்டை, முடிச்சுகளோடு, பிள்ளை குட்டி களோடு கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ் தானிய மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக் கிறார்கள். எங்கே போவது, எப்படி போவது, எதில் போவது என எதிலும் திட்டமிடப்படாத கண் ணீர் வாழ்க்கை, அவர்க ளுக்கு சொந்தமாகி விட் டது.

அமெரிக்கா ஏற் கெனவே 1 லட்சத்து 23 ஆயிரம் மக்களை ஆப் கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியதாக கணக்கு கூறியது. அவர் களில் எத்தனை பேர் ஆப்கானிஸ்தானியர்கள் என்ற புள்ளிவிவரம் தெரி விக்கப்படவில்லை. ஏற்கெனவே 22 லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாய் குடியேறி இருக்கிறார்கள். இப் போது 35 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட் டாயம் ஏற்பட்டிருப்பதாக சொல் கிறார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் கால் நடைகள் போல ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு குடும்பம், குடும்பமாக நடந்து சென்று கொண் டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின் றன. ஆப்கானிஸ் தானிய அகதிகளை ஏற்க மாட் டோம் என்று பாகிஸ்தான் கூறினாலும் ஸ்பின் போல் டாக் சாமன் எல்லை மூடப்படவில்லை என்கி றார்கள். ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் அந்த எல்லை வழியாக பாகிஸ் தானில் தஞ்சம் புகுகிறார் களாம். இதற்கு செயற்கை கோள் படங்களை ஆதா ரமாக காட்டு கிறார்கள்.

No comments:

Post a Comment