கோயம்புத்தூர், செப்.6 சீமென்ஸ் ஹெல்த்னீயர்ஸ், மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை மருத்துவ மய்யம் மற்றும் மருத்துவமனை (கேஎம்சிஎச்) இணைந்து சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் HEAL’ க்கான உயர்தர மேமோகிராஃபி அமைப்பான MAMMOMAT ஃப்யூஷனை நிறுவியுள்ளது.
மொபைல் டிஜிட்டல் மேமோகிராம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஸ்கிரீனிங் யூனிட் மூலம், இந்த திட்டம் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் தேவைகளுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட டிஜிட்டல் மேமோகிராபி சாதனம் மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை கருவி பொருத்தப்பட்ட மொபைல் யூனிட் 30,000 சதுர கி.மீ. யில் ஏழை, எளிய, பின்தங்கிய பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான இலவச ஸ்கிரீனிங் மற்றும் அறுவை சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆண்டுக்கு 200 முதல் 250 முகாம்களை நடத்துவதன் மூலம். சந்தேகத்திற்கிடமான புண்கள் கண்டறியப்பட்டால், இலவச அறுவை சிகிச்சையும் வழங்கப்படுகிறது என சீமென்ஸ் நிறுவன தலைவர் நிகேஷ் ஜான் வர்கீஸ் ரோட்டரி கிளப் திட்டத் தலைவர் சுரேஷ் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புத்தாக்கமான தொழில்நுட்பத்தில்
கல்வி கற்றல் சேவை திட்டம்
சென்னை, செப்.6 உலகின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான பைஜுஸ் (BYJU'S)ஒரு விரிவான பள்ளிக்குப் பிந்தைய இணைய பயிற்சித்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வகுப்புகள் இந்தியாவில் இரண்டு ஆசிரியர் வடிவாக்கத்தை வழங்கும்முதல் இணைய வழி கல்வித்திட்டமாகும், இது சிறந்த கற்றல் அனுபவங்களை வழங்கும் வகையில், தரமான கற்பித்தலையும் வழங்குவதை நோக்கம் கொண்டது.
தொற்றுநோய் காலத்தில் இணையவழிக் கல்வி பரவலான வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளதால், கல்வித் தொழில்நுட்பத் துறை ஒரு மாற்றாகவும், கற்றல் வாய்ப்பாகவும்உள்ளது. இரண்டு ஆசிரியர்களின் நன்மை அந்தக் கற்றலின் பிரதி பலிப்பாகும்.
ஒவ்வொருகூறுக்கும்இரண்டுஅர்ப்பணிப்பு ஆசிரியர்களுடன் கருத்துத் தெளிவு மற்றும் சந்தேகத் தீர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் ஒவ்வொரு மாணவரின் முக்கியமான கற்றல் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என இந்நிறுவன அதிகாரி மிருணாள் மோகித்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment