தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதலமைச்சரை பாராட்டி கருத்தரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதலமைச்சரை பாராட்டி கருத்தரங்கம்!

வடலூர், செப். 5 கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்து விட்ட, பெரியார்உலகம்அமைய அனுமதி வழங்கிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களை பாராட்டி வடலூரில்

கருத்தரங்கம் 1.9.2021அன்று மாலை 6 மணியளவில் நடந்தது.

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கருத்தரங்கை தொடக்கி வைத்தார். முனைவர் சிவ.இளங்கோ, கவிஞர் இளவரசி சிறப்புரையாற்றினர்.

புலவர் இராவணன் தலைமையில் ஆர்பிஎஸ்.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

கவிஞர் மலர்விழி, ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி, பெரியார்செல்வம், குணசேகரன்,வெற்றிச்செல்வன், ராமராஜ், பெரியார்தாசன், யாழ்திலீபன், உதயசங்கர்,வேலு,பஞ்சமூர்த்தி ஆகியோர் பேசினர்.

மகளிரணிசெயலாளர் ரமாபிரபா சத்தியா குணசுந்தரி, தமிழேந்தி, கேக் வெட்டினர். முருகன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment