பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாதிகள் அட்டூழியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாதிகள் அட்டூழியம்

இசுலாமாபாத், செப். 29- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலிஜின்னாவின் சிலை தீவிரவாதி களால் குண்டுவைத்து தகர்க்கப் பட்டது.

பலுசிஸ்தானின் துறைமுக நகரான குவாதரில் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது அலி ஜின்னாவின் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் 27.9.2021 அன்று சிலைக்கு அடியில் குண்டு வெடித் ததில் சிலை வெடித்து சிதறியது.

இதற்கு தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் தீவிரவாத அமைப் பான பலோச் குடியரசுப்படை பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து குவாதர் துணை ஆணையரான ஓய்வுபெற்ற ராணுவ  மேஜர் அப்துல் கபீர் கான் கூறும் போது, “சுற்றுலாப் பயணிகளை போல அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ஜின்னாவின் சிலையை குண்டு வைத்து தகர்த் துள்ளனர். இது தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை. இந்த சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க விரும் புகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படு வார்கள்என் றார்.

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ் தான் சித்தாந்தத்தின் மீதான தாக் குதல் என எம்.பி.யும் முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்ப் ராஸ் பக்டி கூறியுள்ளார்.

பலுசிஸ்தானின் ஜியாரத் நகரில் ஜின்னா தனது இறுதிக் காலத்தை கழித்த வீடு தேசிய நினை வுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த வீட்டில் கடந்த 2013-ல் நடந்த குண்டுவெடிப்பில், அந்த வீடு தீயில் கடும் சேதம் அடைந்தது.

இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டது போலதற் போதும் தண்டிக்கப்பட வேண்டும் என சர்ப்ராஸ் பக்டி வலியுறுத்தி யுள்ளார்.


No comments:

Post a Comment