ரியல் எஸ்டேட் துறைக்கு பெண்கள் வர வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

ரியல் எஸ்டேட் துறைக்கு பெண்கள் வர வேண்டும்

புதுடில்லி, செப். 29- ரியல் எஸ்டேட் துறையில் மிகுந்த வாய்ப்புகள் இருப்பதால், பெண் தொழில் வல்லுநர்கள் அதிகளவில் இத் துறைக்கு வரவேண்டும் என, வீட்டு வசதி துறை செயலர் துர்கா ஷங்கர் மிஸ்ரா கேட்டுக் கொண்டு உள்ளார்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில், பாலின பிரதிநிதித்துவத்தில் போதுமான கவனம் செலுத்துவதற்காக, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சிலில் பெண்கள் பிரிவை துவங்கி வைத்து, அவர் மேலும் கூறியதாவது: ‘ரெராஎன சுருக்கமாக அழைக்கப்படும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், சந் தையில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இந்தத் துறையில் பணியாற்ற பெண் தொழில் வல்லுநர்கள் முன்வர வேண் டும். பெண்கள் கடினமான பல துறைகளில் பணியாற்றும்போது, ஏன் இந்த துறைக்கு வரத் தயங்க வேண்டும்?இந்திய பொருளாதா ரத்தின் வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் துறை மிகவும் முக்கியமானது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அதிக பங்களிப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறையாக ரியல் எஸ்டேட் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment