அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகள்

புதுடில்லி, செப். 28- இந்தியா வில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர் களை குறிவைத்து, இணைய குற்றவாளிகள் திட்ட மிட்டு வருவதாகசிஸ்கோ டாலோஸ்நிறுவனம் எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ராணுவ வீர்கள் மீதான சைபர் தாக்குதலுக்கான ஒரு திட்டத்துடன், இணைய குற்றவாளிகள் முயற்சிகளை மேற் கொண்டு வருவதை கண் டுபிடித்துள்ளதாக, சிஸ்கோ டாலோஸ் நிறு வனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தன்னுடைய கண்டு பிடிப்பு குறித்து, ஒரு இணைய இடுகையையும் வெளியிட்டுள்ளது.

அதில், அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு முக வர்கள் தொடர்பான ரகசிய தகவல்களை பெறு வதற்காக, தீங்கிழைக்கும் வகையிலான ஆவணங் களை அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கும் திட் டத்தில், இணைய குற்ற வாளிகள் எவ்வாறு செயல் பட்டு வருகின்றனர் என்பதை விரிவாக விவ ரித்துள்ளது.

குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தங்கள் மின்னஞ்சல்களுக்காக பயன்படுத்தும்கவச்எனும் செயலியை அணுகி தகவல்களை கவர முயற் சித்து வருவது குறித்தும் விவரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், கடந்த 2020 டிசம்பரில், ‘மால்டாக்ஸ்எனும் தீங்கிழைக்ககூடியஎம்.எஸ். டாக்குமென்ட்அய் பயன்படுத்தி, பல் வேறு தகவல்களை பெற முயற்சித்தது குறித்தும் கட்டுரையில் விவரிக்கப் பட்டுள்ளது.

அத்துடன், இவற் றுக்கு எதிராக அரசு பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக ளையும், அந்த இணைய பதிவில், சிஸ்கோ டாலோஸ் வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment