திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம்
(சென்னை பெரியார் திடல் - 4.9.2021)
கழகத் தலைமைச் செயற்குழுவில் கரோனா கட்டுப்பாட்டின்படி தனி நபர் இடைவெளியுடன் - முகக் கவசமணிந்து கழகப் பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர்.
மோகனா வீரமணி அம்மையார் அவர்கள் கழக வெளியீடான 'பெண் விடுதலை' 10 நூல்களை தனது சொந்தப் பொறுப்பில் வாங்கி, திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களுக்கு பரிசளித்தார்.
தமிழர் தலைவரிடம் "பெரியார் உலகம்" உருவாக்கத்திற்கு நன்கொடையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை ஜெயராமன் - தகடூர் தமிழ்ச்செல்வி (காசோலை) ஆகியோர் தலா ஒரு இலட்சமும், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அய்ம்பதாயிரமும் முதல் தவணையாக வழங்கினர்.



No comments:
Post a Comment