இராணுவ பயிற்சியில் பகவத் கீதை, அர்த்தசாஸ்திரத்தை பாடமாக்க பரிந்துரையா? ஒன்றிய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கடுங் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

இராணுவ பயிற்சியில் பகவத் கீதை, அர்த்தசாஸ்திரத்தை பாடமாக்க பரிந்துரையா? ஒன்றிய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கடுங் கண்டனம்

புதுடில்லி,செப் 4- தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் முப்படைகளின் இராணுவ பயிற்சிக்கான பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி உள்ளது. இந்த மய்யத்தில் பயிற்சி பெற்ற பலர் இராணுவம், விமானம், கடற்படையில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர். இக்கல்லூரியில் அண் மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பண்டையக் காலத்தின் பகவத் கீதை, கவுல்டில்யாவின் அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் இருந்து பயிற்சி தொடர்பான போதனைகளை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய கலாச்சார ஆய்வு மன்றத்தை உருவாக்கி இதனை இராணுவ பயிற்சிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராயவும் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேகே. மிஸ்ரா கூறுகையில், ``இராணுவ விவகா ரங்களிலாவது அரசியல் செய்வதை ஒன்றிய அரசுவிட வேண்டும். பயிற்சிப் பாடத்தில் பகவத் கீதை, அர்த்தசாஸ்திரத்தை சேர்ப்பதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற முஸ்லிம் வீரர்களும் உதவி உள்ளனர்,’’ என்று தெரிவித்தார்.

 

 

No comments:

Post a Comment