கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா!
பெங்களூரு,செப்.4- கருநாடக மாநில எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராய ணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;-
கருநாடகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020-அய் அரசு அமல் படுத்தி உள்ளது. கருநாடகத்தில் தற்போது தேசிய கல்வி கொள் கையை நிபுணர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுடன் ஆலோ சிக்காமல் திடீரென்று அரசு அமல்படுத்தி இருக்கிறது. புதிய தேசிய கொள்கையில் இருக்கும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து விரிவாக எந்த ஒரு விவாதமும் நடத்தாமல், இந்த கல்வி ஆண்டிலேயே புதிய தேசிய கல்வி கொள்கை 2020-அய் அரசு அமல்படுத்தி இருப் பது சரியான முடிவு அல்ல.
தேசிய கொள்கையை அமல் படுத்திய பின்பு, அதுகுறித்து விவாதம் நடைபெறுவது தேவை யற்றது. உயர்கல்வித்துறை அமைச் சராக இருக்கும் உங்களுக்கு, அது பற்றி தெரியவில்லையா?. குவெம் புவின் கல்வி கொள்கை, அவரது உயர்தரமான கல்வி பற்றி அரசு பேசுகிறது. கல்வித்துறையில் பணியாற்றுபவர்களும், அது சம் பந்தப்பட்ட பணிகளில் இருப்ப வர்களும் குவெம்பு நமக்கு அளித்த கல்வி பற்றிய தகவல்களை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒரு நாட்டிலும் உயர் கல்வித்துறை சிறப்பாக இருந்தால் தான், அந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சரியான முறையில் தீர்வு காண முடியும். ஏற்கெனவே மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அதிக ரித்து, கல்விச் சுமை அதிகமாக இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன இதுபற்றி விவாதிக்க வேண்டியது அவசியமாகும். இந்த புதிய கல்வி கொள்கையால் சாதாரண ஏழை, கிராமப்புற மாணவ, மாணவி களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே கருநாடக அரசு அமல் படுத்தி உள்ள புதிய கல்வி கொள் கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறி யுள்ளார்.

No comments:
Post a Comment